மாநில பாடத்திட்டத்தில் இருந்து சி.பி.எஸ்.இ பள்ளிகளுக்கு மாறுவது பற்றி கேட்டேன்….அது அந்தந்த குழந்தையை பொறுத்தது…சி.பி.எஸ்.இ பாடங்களை கிரகித்துக்கொண்டு , நன்றாக படிக்கும் வாய்ப்புள்ள குழந்தைகள் மாறலாம்… மற்றபடி பெற்றோர் தங்கள் விருப்பத்திற்காக சி.பிஎஸ்.இ யை திணித்தால் , அது எதிர்வினையில் முடியலாம்என்றார்….

சி.பி.எஸ்.இ என்பது ஒன்றும் ஆகாயத்தில் இருந்து வரவில்லை..என்.சி.இ.ஆர்.டி யின் பாடத்திட்டங்களை பின்பற்றுபவைதான் சி.பி.எஸ். இ பள்ளிகள்…[ நான் சி.பி.எஸ்.இ யில்தான் படித்தேன் …]

நம் ஊரில் இருக்கும் மிகப்பெரும்பாலான சி.பி.எஸ்.இ பள்ளிகள் பெயரளவுக்கு மட்டுமே என்றார்…காரணம் பாடத்திட்டம் மட்டுமே என்.சி.இ.ஆர்.டி உடையது…கற்பிக்கும் ஆசிரியர்கள் அதற்கான பயிற்சி இல்லாதவர்கள்… பெரும்பாலும் மெட்ரிக் பள்ளியில் பணியாற்றியவர்கள்…அவர்களால் உண்மையான சி.பி.எஸ்.இ தரத்தை தங்கள் பயிற்சியில் கொண்டுவரமுடியாது என்றார்….

அவர் கடைசியாக சொன்னதுதான் ஹைலைட்…

பி.ஜே.பி இன்னும் பத்துவருடத்தில் நாடு முழுக்க ஒரே மாதிரியான என்.சி.இ.ஆர்.,டி பாடத்திட்டத்தை கொண்டுவந்துவிடும்…. நம்முடைய ஹைதர் அலி கால பாடத்திட்டமெல்லாம் இனி செல்லாது…எனவே உங்கள் மகன் உயர்நிலைப்பள்ளிக்கு வருவதற்குள் நம் பாடத்திட்டம் என்.சி.ஆர்.டிக்கு மாறிவிடும் என்றார்…

அவருடன் பேசியதில் இருந்து எனக்கு கிடைத்த சில விஷயங்கள்.

1. அவர் பாஜக ஆதரவாளர் அல்ல…. ஆனால் பாஜக தொடர்ந்து இன்னும் இரண்டுமுறை தொடர்ந்து ஆட்சியில் நீடிக்கும் என்று நினைக்கிறார்.

2. இந்த தேசத்துக்கு ஏதாவது நன்மை செய்ய முடியும் என்றால் , அது பாஜகவால் மட்டுமே முடியும் என்று நினைக்கிறார்..,.[ கேஸ் மானியம் உள்ளிட்ட , பயனாளிகள் கணக்கில் நேரடியாக மானியங்களை சேர்க்கும் திட்டங்களை வெகுவாக சிலாகித்தார்…]

3. கல்வி முறையில் மாற்றம் தேவை… மோடி அதை நிச்சயம் சாதிப்பார் என்று நினைக்கிறார்…

பாஜக தொடர்ந்து பெற்றுவருவதற்கான காரணங்கள் இவைதான் என்று நினைக்கிறேன்…. இந்த தேசம் இனி உருப்பட வேண்டுமென்றால் , அதற்கு ஒரே வழி பாஜகவை ஆதரிப்பதுதான் என்ற முடிவுக்கு கணிசமானோர் வந்துவிட்டனர்…அந்த நம்பிக்கையை மோடிஜி மக்கள் மனதில் ஏற்படுத்தியிருக்கிறார்…

நல்லவர்களின் நம்பிக்கை பொய்க்காமல் , அவர்களின் எண்ணம் ஈடேற மோடி சாதித்துக்காட்டுவார் என்று நான் நம்புகிறேன்…இறைவன் அதற்கான சக்தியை அவருக்கு வழங்கவேண்டும் என்று வேண்டுகிறேன்…

ஜெய்ஹிந்த்!

சரவணன்

Leave a Reply