தனி நபர் சுதந்திரம் அடிப்படை உரிமையே என்ற சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பை வரவேற்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இவ்விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப் பாட்டையே சுப்ரீம் கோர்ட்டு உறுதிசெய்துள்ளது என மத்திய சட்டத் துறை மந்திரி ரவிசங்கர்பிரசாத் பேசி உள்ளார்.

 

 முழுமையாக தனி நபர் உரிமையானது கொடுக்கமுடியாது, சிலகட்டுப்பாடுகளுக்கு உட்பட்டதுதான் என கூறி உள்ளது என ரவிசங்கர்பிரசாத் சுட்டிக் காட்டிஉள்ளார். 

 

மத்திய சட்டத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் செய்தியாளர்களிடம் பேசுகையில், “மத்திய அரசு பாராளுமன்றத்தில் ஆதாரமசோதாவை கொண்டுவந்த போது கூறியதையே, சுப்ரீம்கோர்ட்டு உறுதிசெய்து உள்ளது. நியாயமான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு தனிநபர் உரிமையானது அடிப்படையான உரிமையாகும்,” என கூறிஉள்ளார். “சுப்ரீம்கோர்ட்டில் முடிவானது பாசிச படைகளுக்கு பெரியஅடியாகும். கண்காணிப்பு மூலமான அடக்குமுறை என்ற பாரதீய ஜனதாவின் கொள்கையை நிராகரிக்கும் ஒலியாகும்,” என காங்கிரஸ் விமர்சனம் செய்து உள்ளது தொடர்பாக டுவிட்டரில் பதிலளித்து உள்ள ரவிசங்கர்பிரசாத், 

 

நெருக்கடி நிலையின் போது தனிப்பட்ட சுதந்திரங்களை பாதுகாத்தலில் காங்கிரஸ் சாதனை படைத்துள்ளது என விமர்சனம் செய்துள்ளது.

 

ஆதாரை அடையாள அட்டையை கட்டாயமாக்கும் திட்டம் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் வழங்கப் பட்டுள்ள அடிப்படை உரிமையான தனிநபர் சுதந்திரத்தை மீறுகிறதா? என்பது குறித்தவழக்கில் விசாரணையை நடத்திய சுப்ரீம்கோர்ட்டு அரசியல்சாசன அமர்வு, இந்திய அரசியல் சாசனத்தின்படி தனி நபர் சுதந்திரம் அடிப்படை உரிமையே என தீர்ப்பு வழங்கி உள்ளது.

Tags:

Leave a Reply