உலகத்திலேயே தன் நாட்டு கரன்சியைத் தானே கள்ள நோட்டு அடித்த அரசு இந்திரா காங்கிரஸ் அரசும் அதில் பிரதமராக இருந்த மன்மோகன் சிங் ஆகத்தான் இருக்க முடியும்.

நினைத்தாலே பதறச் செய்யும் உலகமகா துரோகம். ஆம்! இதை ஊழல் பட்டியலில் சேர்ப்பதை விட தேசத் துரோகப் பட்டியலில் தான் சேர்க்க வேண்டும்.

2010ம் ஆண்டில் எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், சுமார் 70 ரிசர்வ் பேங்க் அலுவலகங்களில் சிபிஐ நடத்திய ரைடில் பல இந்திய ரூபாய்கள் ஒரே சீரியல் கொண்டதாக இருந்திருக்கிறது. ஆஹா! காங்கிரஸ் அரசில் சிபிஐ சுதந்திரமாகச் செயல்பட்டிருக்கிறதே என்று பெருமைப்படத் தொடங்கும் அதே நேரம் அதை அப்படியே மூடி மறைத்தது இந்த காங்கிரஸ் அரசு தான் என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.
உலகத்தில் எந்த நாட்டிலும் நடக்கக் கூடாத கொடுமையை மக்களுக்கு இழைத்து விட்டு எப்படி எதுவும் தெரியாதது போல நடித்தது காங்கிரஸ்?

 இந்தப் பணமெல்லாம் நாம் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ புழக்கத்தில் விட்டதாகவும், அதே ஐஎஸ்.ஐ ரிசர்வ் பேங்குக்கு உள்ளேயே கொண்டு வந்து வைத்து விட்டுப் போனது என்று நாம் நம்ப வேண்டும். இல்லாவிட்டால் வேறுவிதமான முத்திரை குத்தி விசயத்தைத் திசைத் திருப்பி விடுவார்கள்.

 ஏன் இதுவெல்லாம் வடக்கிந்திய மீடியாக்களுக்கு ஏதும் தெரியாதா? நிச்சியம் தெரிந்திருக்கும். வாயை மூடிக் கொண்டிருக்க பற்பல கோடி ரூபாய்கள் அள்ளியிறைத்திருப்பார்கள். வாங்கித் தின்ன விசுவாசத்தில் மீடியாக்கள் இதை மறைத்ததோடு அல்லாமல் காங்கிரஸை யோக்கியர்களாகக் காட்ட முனைந்து செயல்படுகின்றன.
மீடியாக்கள் என்பது நாட்டின் ஐந்தாம் தூணா இல்லை ஐந்தாம் படையா?

ஊழல் பெரும்பூதங்களாக அரசியல்வாதிகள் வளர்வதை மக்கள் சிறுசிறு பணத்திற்காக ஆசைப்பட்டு பொறுத்துக் கொண்டிருப்பது தினமும் சாப்பிடும் சோற்றில் தானே விசம் கலந்து கொள்வதற்குச் சமம். வெளி வந்திருக்கும் ஊழல் எனும் உச்சகட்டத் துரோகத்தைக் கவனிக்கும் போது, இன்னும் ஒரு முறை காங்கிரஸை ஆள அனுமதித்திருந்தால், நிச்சியம் நம் நாட்டினை விற்றிருப்பார்கள்.

இந்த ஊழலில் பின்புலத்தைத் தீவிரமாக ஆராய்ந்து மிக விரைவிலேயே, இதில் சம்பந்தப்பட்ட அனைவரையும் குறிப்பாக அன்றைய பிரதமர், நிதியமைச்சர்கள் மற்றும் ஆர்பிஐ அதிகாரிகளை உடனடியாகத் தண்டிக்க வேண்டும்.

Leave a Reply