குஜராத் மாநிலத்தில் விலைவாசி உயர்ந்து ள்ளதாக விமர்சித்து ராகுல்காந்தி வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தவறுகண்டுபிடித்த நெட்டிசன்கள் அவரை வைத்து காமெடி செய்துவருகிறார்கள்.

குஜராத் மாநிலத்தில் வரும் டிசம்பர் 9 மற்றும் 14ஆம் தேதிகளில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனைமுன்னிட்டு பாஜகவினரும் காங்கிரஸ்காரர்களும் அம்மாநிலத்தில் சூறாவளிப் பிரசாரம் மேற்கொண்டுள்ளனர். பிரதமர் நரேந்திர மோடியும் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியும் பல இடங்களில் தொடர்ந்து பொதுக் கூட்டங்களில் பேசி வருகின்றனர்.

இந்நிலையில், ராகுல்காந்தி குஜராத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதாக புள்ளிவிவரங்களுடன் கூடிய பதிவை ட்விட்டரில் வெளியிட்டார். இதில் 2014ஆம் ஆண்டு 2017ஆம் ஆண்டுகளில் அத்தியாவசிய பொருட்களின் விலையை பட்டியலிட்டு, விலை வாசி எத்தனை சதவீதம் உயர்ந்துள்ளது என்பதை குறிப் பிட்டிருந்தார்.

ஆனால், விலை வாசி உயர்வு சதவீதம் தவறாகவும் ஒவ்வொன்றிலும் 100 சதவீதம் அதிகமாகவும் இருந்தது. உடனேகவனித்து நெட்டிசன்கள் கலாய்க்க தொடங்கினர். அசிங்கப்பட்ட ராகுல் அந்த பதிவை டெலிட்செய்துவிட்டு, விலைவாசி உயர்வு சதவீதத்தை குறிப்பிடுவதற்குப் பதிலாக விலைவாசியில் உள்ள வித்தியாசத் தொகையைமட்டும் குறிப்பிட்டு மீண்டும் அதே பதிவை போட்டார்.

இதையும்விட்டு வைக்காத நெட்டிசன்கள் சதவீதக்கணக்கு தெரியாமல் கழித்தல்கணக்கு போட்டு தப்பித்து விட்டார் என்று ராகுலை வைத்து காமெடி செய்துவருகின்றனர்.

Leave a Reply