தமிழகத்தின் 25வது கவர்னராக பன்வாரி லால் புரோஹித் இன்று (அக்.,6) பதவியேற்றுக் கொண்டார். சென்னை கிண்டியில் உள்ள ராஜ் பவனில் காலை 9.30 மணியளவில் நடந்தவிழாவில், ஐகோர்ட் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

பதவியேற்ற பின்னர் பன்வாரிலால் நிருபர்களுக்கு அளித்த முதல் பேட்டியில் கூறியதாவது; அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு செயல் படுவதில் உறுதியாக இருப்பேன். அரசியல்சட்டத்தை காப்பது எனது முதல்கடமை. அரசியல் சார்புடன் எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்கமாட்டேன். செயல்பாட்டை பொறுத்து தமிழக அரசுக்கு எனது ஆதரவு இருக்கும். அரசின் நிர்வாகத்தில் முழு அளவில் வெளிப்படைதன்மை உறுதிசெய்யப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். .

 

Leave a Reply