🚩தமிழக கவர்னர் விவகாரம் குறித்து, லோக்சபாவில் விவாதிக்கவலியுறுத்தி, தி.மு.க., – எம்.பி., டி.ஆர்.பாலு, சிறப்புகவன ஈர்ப்புத் தீர்மான ‘நோட்டீஸ்’ கொடுத்திருந்தார்.

🚩அந்த நோட்டீஸை.. சபாநாயகர் ஓம்பிர்லா அனுமதிக்கவில்லை. இதனால், லோக்சபாவில் கோஷம் எழுப்பிய, தி.மு.க., எம்.பி.,க்கள், சபையிலிருந்து திங்களன்று வெளிநடப்புச்செய்தனர்.

🚩மத்திய பா.ஜ கட்சி அரசால் நியமிக்கப்பட்ட கவர்னர் ரவி, கழக ஆட்சியாளர்கள் ஊதும்மகுடிக்கு ஏற்ற வகையில் ஆட மறுப்பதால், அவர்கள் மீது திராவிட செம்மல்கள் ‘செம’ காட்டத்தில் உள்ளனர்.

🚩அத்துடன், தி.மு.க., அரசுபற்றி, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கவர்னர் கொடுத்த அறிக்கையால்தான், டில்லி தி.மு.க., அலுவலக திறப்புவிழாவில், பா.ஜ., சார்பில், யாரும் பங்கேற்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

🚩கடந்த ஆண்டு சட்டசபை தேர்தலின் போது, தி.மு.க.,வின், அடுக்கடுக்கான, ‘டுபாக்கூர்’ வாக்குறுதிகளை நம்பி மக்கள்ஓட்டளித்தனர்.

🚩அந்த வாக்குறுதிகளில் ஒன்றிரண்டுதான் நிறைவேற்றப்பட்டன. மற்றவை எல்லாம் கிணற்றில் போட்டகல்லாகவே இருக்கின்றன.

🚩அதே நேரத்தில், விலைவாசி உயர்வோடு, தி.மு.க., அரசு அறிவித்த சொத்துவரி உயர்வால், தமிழக மக்கள் பேய்முழி முழித்து கொண்டிருக்கின்றனர்.

🚩தி.மு.க.,வுக்கு ஓட்டளித்து தாங்கள்செய்த தவறுக்குரிய தண்டனையை, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தமிழகமக்கள் அனுபவித்தே ஆக வேண்டும்; வேறு வழி கிடையாது

அதேபோல,

🚩கவர்னர் ரவியின் நியமனத்தையும், கழக அரசு சகித்துக் கொண்டுதான் தீர வேண்டும்.

🚩பார்லிமென்டில் தி.மு.க., – எம்.பி.,க்கள் கூச்சல்போடுவதால் மட்டும், கவர்னரை மாற்றிவிட முடியாது.

🚩மேலும், தங்கள் இஷ்டத்திற்கு ஏற்றார்போல செயல்படாத கவர்னரை மாற்ற வேண்டும் என்று, தி.மு.க.,வினர் குரல்கொடுப்பது இன்று நேற்றல்ல, காலம் காலமாக தொடர்கிறது.

கழகத்தினரை பொறுத்தமட்டில்,

🚩கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்களில், யாராவது ஒருவரை கவர்னராக நியமித்தாலன்றி, எதிர்ப்புதெரிவித்துக் கொண்டேதான் இருப்பர்.

🚩தி.மு.க.,வினரின் எதிர்ப்புக்கு தகுந்தபடி எல்லாம், கவர்னரைநியமிக்க துவங்கினால், தமிழகத்திற்கு வாரம் ஒருகவர்னரை நியமிக்க வேண்டியது நேரிடும்.

அதெல்லாம் நடக்கிற காரியமா என்ன..? 🥺😳🙄

 

Comments are closed.