தமிழகத்தில் எஸ்ம்ஸ் மருத்துவமனை அமைக்க 6 மாதங்களில் நடவடிக்கை எடுக்கப் படும் என மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சர் அஸ்வினி குமார் சவுபே கூறியுள்ளார்.

சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவ மனையில் டெங்குபாதிப்பு குறித்து மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சர் அஸ்வினி குமார் சவுபே ஆய்வுசெய்தார். நோயாளிகளிடம் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார். ஆய்வின்போது தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரசெயலர் ராதாகிருஷ்ணன், தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

பின்னர் அஸ்வினிகுமார் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்து வமனை அமைக்க 6 மாதத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவமனை அமையும்இடம் 3 மாதத்தில் தேர்வுசெய்யப்படும். இந்த இடத்தை முதல்வரும், அமைச்சர்களும்தான் தேர்ந்தெடுக்க வேண்டும். எய்ம்ஸ் மருத்துவமனை பூமிபூஜை விழாவில் பிரதமர் மோடி கலந்துகொள்வார்.டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவதில் மாநில அரசு சிறப்பாக செயல்படுகிறது. தமிழகத்தில் குழந்தைகள் இறப்புவிகிதம் கட்டுக்குள் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
அஸ்வினிகுமாரைத் தொடர்ந்து முதல்வர் பழனிசாமியும் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் டெங்குவுக்கு சிகிச்சை பெறுபவர்களை சந்தித்தார்.

Leave a Reply