தமிழகத்தில் கழகங்களின் ஆட்சி அழிந்துகொண்டிருக்கிறது என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

நாமக்கல்லில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்தவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் அதிமுக ஆட்சி கவிழ பாஜக காரணமாக இருக்காது. ஆட்சியை வலுவாக நடத்த அவர்கள் முயற்சிசெய்ய வேண்டும். கடந்த 6 மாதமாக தமிழகத்தில் இக்கட்டான சூழ்நிலை நிலவிவருகிறது. இது தமிழகத்துக்கு எந்த நிலையிலும் நல்லதல்ல.

ஆர்கே நகர் இடைத் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்தவிவகாரத்தில் தேர்தல் கமிஷன் யார், யார் மீது வழக்கு தொடரவேண்டும் எனக் கூறியுள்ளதோ அது நிகழ்ந்தாக வேண்டும். தமிழகத்தில் நிலவும் நிலையில்லா ஆட்சிக்கும், மத்திய அரசுக்கும் எந்தசம்பந்தமும் இல்லை. அதிமுக பலகுழுக்களாக பிரிந்திருப்பது நல்லதல்ல. தமிழகத்துக்கு நல்ல காலம் பிறந்து கொண்டிருக்கிறது. கழகங்களின் ஆட்சி அழிந்து கொண்டிருக்கிறது என்றார்.

Leave a Reply