தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை திறக்க வேண்டும் தமிழ் ஆளுமை நிறைந்தமொழி, சமஸ்கிருதம் மற்றும் வட மொழிகளை காட்டிலும் மூத்தமொழி என்று பிரதமர் தெரிவித்துள்ளார். காமராஜருக்கு பிற  மொழி புலமை இருந்திருந்தால் 1960ம் ஆண்டிலேயே பிரதமரைபெற்ற மாநிலமாக தமிழகம் இருந்திருக்கும்.   இந்தியாவில் 1,128 கேந்திரிய  வித்யாலயா பள்ளிகள் உள்ளன. இந்தபள்ளிகளில் 12 லட்சம் பேர் படிக்கின்றனர். தமிழகத்தில் உள்ள 43 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 62  ஆயிரம்பேர் படிக்கின்றனர். காமராஜர் 12 ஆயிரம் பள்ளிகளை தொடங்கி லட்சக் கணக்கான மாணவர்களுக்கு இலவச கல்வி கொடுத்தார். இருப்பினும்  தற்போது தனியார் பள்ளிகளுக்கு செல்கின்றனர். காமராஜர் தொடங்கிய பள்ளிகள் 20 மாணவர்களுடன் இயங்கவேண்டிய காரணம் என்ன?

அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்தவேண்டும். கேந்திரிய பள்ளிகளில் இடம் கிடைக்கவில்லை என்கின்றனர். மத்திய அரசின் நவோதயா பள்ளிகள்  நமது நாட்டில் நூற்றுக் கணக்கில் உள்ளன. ஆனால், தமிழகத்தில் ஒரு பள்ளி கூட இல்லை. நவோதயா பள்ளியில் தமிழ்ப்பாடம் உண்டு. உறைவிடம்,  கல்வி இலவசமாக வழங்கப்படுகிறது. தமிழகத்திற்கு 10 நவோதயா பள்ளிகளை ஒதுக்கக் கோரி பிரதமருக்கு கடிதம் எழுதினேன். மத்திய அரசு எந்த மொழியையும் திணிக்காது. ஆனால், விருப்பப்பட்டு படிப்பதை தடுக்க யாருக்கும் உரிமை இல்லை. நவோதயா பள்ளி திறப்பதற்கான விண்ணப்பத்தை  தமிழக அரசு உடனடியாக கொடுக்கவேண்டும். கல்விக்காக மத்திய அரசு ரூ.75 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளது.

மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

Leave a Reply