தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழலுக்கு பா.ஜ., காரணமல்ல என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் தெரிவித்துள்ளார்.


தமிழக பாஜக தலை மையகமான  தி.நகரில் உள்ள கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தவர்,  பேசியதாவது: உச்ச நீதிமன்றம்  செவ்வாய்க் கிழமை சரித்திரம் பேசக்கூடிய இரண்டுதீர்ப்புகள் வழங்கியுள்ளது..

முத்தலாக் தீர்ப்பை பெண்களின் நலன்சார்ந்தே பார்க்க வேண்டும். மதம்சார்ந்து பார்க்க கூடாது . தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழலுக்கு பாரதிய ஜனதா  காரணமல்ல,  தில்லியில் பணிகள்இருந்ததால், பாரதிய ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா சென்னை வர இயலவில்லை என்றார்.

திமுக செயல் தலைவர் ஸ்டாலினை பிரதமர் மோடி சந்திக்கமறுப்பதேன் என்ற கேள்விக்கு, யாரை எப்போது பார்க்க வேண்டும் என்பது பிரதமரின் சூழலை பொறுத்தது என்றார்.

Leave a Reply