குடியாத்தத்தில் பாஜக மேற்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

இதில் பங்கேற்ற மத்திய மந்திரி பொன்.ராதா கிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் உள்ள பா.ஜ.க. தலைவர்கள் எல்லா நிலைகளிலும் தகுதிபெற்ற தலைவர்களாக உயர்ந்து வருகிறார்கள். இது தமிழ்நாட்டுக்கு மிகப் பெரிய வரப்பிரசாதமாக அமைந்து வருகிறது.

இடைத்தேர்தல் வரும் போது கூட்டணி குறித்து முடிவு செய்யப் படும். கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் ஆரம்பசுகாதார மையங்களில் பிரதமர் மோடியின் ஆயுஷ்மான் பாரத்திட்டத்தின் மூலம் மேம்படுத்தப்படுகிற நிகழ்ச்சிகளுக்கு சென்று வருகிறேன். இது வரை 21 மையங்கள் திறந்து வைக்கப் பட்டுள்ளது.

 

எந்த இடத்திலும் அதிகாரிகள் டெங்குமரணங்கள் நிகழ்ந்ததாக கூறவில்லை. முன்பு இருந்ததை விட தற்போது அதிக அளவில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இன்னும் அதிக கவனம் செலுத்தினால் நன்றாக இருக்கும்.

தேர்தல் நெருங்கிவரும் போது கூட்டணி குறித்து பாஜக. தலைவர்கள் முடிவு செய்வார்கள். நிச்சயமாக பாஜக. வலுவான கூட்டணியை அமைக்கும். அந்தகூட்டணி தமிழகத்தில் அதிகப் படியான இடங்களை கைப்பற்றும். பா.ஜ.க. தலைமையில் கூட்டணியா அல்லது மற்ற கட்சிகள் தலைமையில் கூட்டணியா என்பது அந்தந்த சூழ்நிலைக்கு ஏற்றாற் போல் முடிவு செய்யப்படும்.

பிரதமர் மோடி எந்த ஒருநாட்டிற்கு சென்றுவந்தாலும், அந்த நாட்டினால் இந்தியாவிற்கு பலன் கொடுக்கும் அளவில் உள்ளது. முன்பெல்லாம் கடன் வாங்க வெளிநாட்டிற்கு சென்றோம். இன்று வியாபாரங்களை பெருக்கவும், தொழில்களை தொடங்கவும் நாம்தயாராக உள்ளோம். இது இந்தியாவின் வளர்ச்சியை காட்டுகிறது.

தமிழகத்தில் அ.தி.மு.க. உள்பட எந்த கட்சியாக இருந்தாலும் பா.ஜ.க. பெயரை சொல்லாமல் அரசியல் நடத்தமுடியாது. தமிழக அரசின் செயல்பாடு முன்பைவிட முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் பாஜக. ஆட்சிக்கு வரும்போது தான் வளர்ச்சியின் உச்சத்தை தமிழகம் எட்டமுடியும். 

இவ்வாறு அவர் கூறினார். 

Leave a Reply