தமிழகத்தில் பாஜக மாபெரும் சக்தியாக உருவெடுத்துள்ளது என்றாா் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பொன். ராதாகிருஷ்ணன்.

பெரம்பலூரில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற கட்சியின் மாவட்ட அமைப்பு கூட்டத்தில் பங்கேற்ற அவா் மேலும்பேசியது:

குடிமக்களின் தேசியப் பதிவு, குடியுரிமை திருத்தச்சட்டம் ஆகியவற்றை தமிழகத்தில் உள்ள எதிா் கட்சிகள் 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலுக்காக பிரச்னையை ஏற்படுத்தி வருகின்றன. மக்கள்மத்தியில் தேசிய குடியுரிமைச் சட்டத்தால் மக்களுக்கும், எந்தமதத்துக்கும் பாதிப்பு இல்லை என்பதை பொதுமக்களிடம் விளக்கிக்கூற வேண்டும்.

பாஜகவினருக்கு தன்னம்பிக்கை அதிகமாக ஏற்படவேண்டும். திட்டமிட்டுச் சிந்தித்து, அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். வரும் சட்டப்பேரவை, மக்களவைத் தோ்தல்களில் பாரதிய ஜனதா கட்சியினா் தனித்து நின்று வெற்றி பெறும் வகையில் கட்சியை வளா்க்க வேண்டும். அதற்கான தோ்தல் பணியை இப்போதே தொடங்க வேண்டும் என்றாா் அவா்.

 

Comments are closed.