தமிழகத்தில் பாஜக மாற்றத்தை ஏற்படுத்தும் என சமீபத்தில் பாஜகவில் இணைந்தமுன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலை பேசியுள்ளார்.

கர்நாடக மாநிலத்தை ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றியவர் அண்ணாமலை. அவர் கடந்த ஆண்டு தன் பணியை ராஜினாமா செய்து விட்டு கோவை மற்றும் ஈரோடு விவ்சாயிகளுக்கு உதவி புரிந்து வருகிறார். பாஜக தேசியதலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் கட்சியில் இணைந்தார் அண்ணாமலை. அந்த நிகழ்வில், தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் இருந்தார்.

அண்ணாமலைக்கு பாஜக துணைத்தலைவர் பதவி வழங்கி அக்கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்திருந்தார். இந்தநிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “கோவையில் என்ஜினீயரிங் முடித்து விட்டு உத்தரபிரதேசமாநிலம் லக்னோவில் எம்.பி.ஏ. படித்தபோது மக்களை சந்திக்கும் வாய்ப்புகள் கிடைத்தன. அப்போது ஏழைமக்களின் வறுமையை பார்க்க முடிந்தது. சமூக மாற்றத்துக்காக எதையாவது செய்யவேண்டும் என்கிற எண்ணமே என்னை அரசியலுக்கு இழுத்து வந்துள்ளது.

பாஜக தமிழர்களுக்கு எதிரான கட்சி என்ற தவறான தகவல் பரப்பப்படுகிறது. தமிழர்களின் நலன் காக்கும் கட்சியாகவே பாஜக உள்ளது. பிரதமர் மோடி தொலைநோக்கு பார்வையோடு பல திட்டங்களை கொண்டு வந்துள்ளார். இளைஞர்கள் மத்தியிலும் பாஜகவுக்கு நல்லவரவேற்பு உள்ளது. இதனால் நிச்சயம் தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்படுவேன். தமிழக அரசியலில் திராவிடகட்சிகளுக்கு மாற்றாக பாஜக நிச்சயம்வளரும். அதற்கு தகுந்த பணிகளை நான் மேற்கொள்வேன்” என்றார் .

மேலும் அண்ணாமலை பாஜகவில் சேர்ந்ததுமுதலே சமூக ஊடகங்களில் விமர்சனங்களை சிலர் வைத்து வருகிறார்கள். அவருடைய படிப்பு, அவர்பெற்ற மதிப்பெண்கள் பற்றியும் கேள்வி எழுப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில், “தன்னைப் பற்றி புத்தகம் வெளியிடப்போவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருந்தபோதுதான் ஐபிஎஸ் தேர்வில் வெற்றி பெற்று பொறுப்புக்குவந்தேன். கர்நாடகாவில் காங்கிரஸ், மஜத ஆட்சியின் கீழ்தான் ஐ.பி.எஸ். அதிகாரியாகப் பணியற்றினேன். பாஜக ஆட்சியில் 4 நாட்கள்தான் பணிசெய்தேன். என்னுடைய கடந்தகால சாதனைகளை பற்றியெல்லாம் நான் பேசவில்லை. என்னைப் பற்றி வரும் தகவல்களை பற்றி சொல்ல விரைவில் எனது வாழ்க்கையை புத்தகமாக விரைவில்வெளியிட இருக்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

Comments are closed.