தமிழ்நாட்டில் திருப்பூர், திருநெல்வேலி, திருச்சி, தூத்துக்குடி உட்பட 30 புதிய ஸ்மார்ட்சிட்டிகள் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. டெல்லியில் நகர்ப்புற வளர்ச்சிதுறை அமைச்சர் வெங்கய்யா நாயுடு புதிய ஸ்மார்ட் சிட்டிகள் பட்டியலை வெளியிட்டுள்ளார். இந்தபட்டியலில் திருவனந்தபுரம் முதல் இடம் பிடித்துள்ளது. இதைத்தொடர்ந்து புதுச்சேரி, பெங்களூர், பாட்னா, ஜம்மு, ஸ்ரீநகர், அலகாபாத் உள்ளிட்ட 30 நகரங்களும் இந்தபட்டியலில் இடம் பிடித்துள்ளன. இந்த 30 நகரங்களை சேர்த்து இதுவரை 90 நகரங்கள் ஸ்மார்ட்சிட்டி எனப்படும் பொலிவுறும் நகரங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளன.


இந்த 30 நகரங்களிலும் ரூ.57,393 கோடி முதலீடு செய்யப்படும் என்று அமைச்சர் வெங்கையாநாயுடு தெரிவித்துள்ளார். நாட்டில் 100 நகரங்கள் தேர்வுசெய்யப்பட்டு, உள்கட்டமைப்பு, சுகாதாரம், தொழில்வளர்ச்சி ஆகியவை மேம்படுத்தப்படும் என்பது மத்திய அரசின்நோக்கம் ஆகும். இதற்காக சென்னை, மும்பை, டெல்லி உள்ளிட்ட 60 நகரங்கள் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டுள்ளன. எஞ்சிய 10 நகரங்களுக்கான போட்டியில் 20 நகரங்கள் உள்ளன. அதில் திண்டுக்கல், ஈரோடு ஆகியநகரங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது

Leave a Reply