தமிழகத்தில்  பெய்த கனமழையால்  ஏற்பட்ட வெள்ளசேத பாதிப்புகளை பிரதமர் நரேந்திரமோடி சிறப்பு ஹெலிகாப்டர் மூலமாக பார்வையிட்டார்.

அவருடன் மத்தியமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் சென்றுள்ளார். ஹெலிகாப்டர் மூலமாக சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ளபாதிப்புகளை மோடி பார்வையிட்டு சேதங்கள் குறித்து கேட்டறிந்தார்.

அதற்குமுன்னர் அடையாறு விமான தளத்தில் முதல்வர் ஜெயலலிதாவை அவர் சந்தித்து வெள்ளச்சேதங்கள் குறித்து கேட்டறிந்தார். அப்போது, தமிழகத்துக்கு உடனடியாக ரூ.1000 கோடி நிவாரணநிதி ஒதுக்கப்படுவதாக மோடி அறிவித்தார்.

முன்னதாக சென்னை விமானநிலையம் குளம்போல காட்சி அளிப்பதால், புதுதில்லியில் இருந்து தனி விமானத்தில் தமிழகம்வந்த பிரதமர் நரேந்திர மோடி, அரக்கோணத்தில் உள்ள ராஜாளி விமானதளத்தில் வந்திறங்கினார்.

அவரை, தமிழக உயர் அதிகாரிகளும், காவல் துறை உயர் அதிகாரிகளும் வரவேற்றனர். அரக்கோணத்துக்கு தனிவிமானம் மூலம் வந்த மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக அடையாறு வந்தார்.

Leave a Reply