தமிழகம் மற்றம் புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வுமுடிவுகள் இணையதளத்தில் இன்று வெளியிட பட்டுள்ளன.
தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 7082 பள்ளிகளை சேர்ந்த 8 லட்சத்து 88 ஆயிரம் பிளஸ் 2 மாணவர்கள் தேர்வை கடந்தமாதம் எழுதினர். மாணவர்களின் விடைத்தாள் திருத்தும்பணி கடந்தவாரம் முடிந்தன. இதையடுத்து, இன்று காலை 9.30 மணிக்கு பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ளன.
ஈரோடு 95.23 சதவிகித தேர்ச்சிபெற்று இரண்டாம் இடத்திலும், பெரம்பலுர் 95.15 சதவிகித தேர்ச்சி பெற்று மூன்றாம் இடத்திலும் உள்ளது. அதேசமயம் 1,281 பள்ளிகள் 100 சதவிகித தேர்ச்சியை பெற்றுள்ளன.
மாணவர்கள் இணையதங்கள் மற்றும் மின்னஞ்சல் மூலம் தேர்வுமுடிவை அறியலாம். பள்ளி மாணவர்கள் மற்றும் தனித் தேர்வர்களுக்கு குறுந்தகவல் மூலமும் தேர்வுமுடிவுகள் அனுப்பப்பட்டுள்ளது.
நாளை முதல் 26-ம் தேதிவரை தாங்கள் படித்த பள்ளிகளில் மதிப்பெண் பட்டியலை மாணவர்கள் பெற்றுக் கொள்ளலாம். தொடர்ந்து தற்காலிக மதிப்பெண் சான்றிதழை வரும் 24-ம் தேதிமுதல் www.dge.tn.nic.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இதுதவிர மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகல்பெற மாணவர்கள் படித்த பள்ளிகள் மூலமும், தனித்தேர்வர்கள் தேர்வு எழுதிய மையங்கள் வழியாகவும் ஏப்ரல் 22 முதல் 24-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.