தமிழக நலனுக்காக தை வெள்ளிக் கிழமை (பிப்.9) மாலை வீடுதோறும் விளக்கேற்றி பிரார்த்தனை செய்யவேண்டும் என்று பொது மக்களை இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராமகோபாலன் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

திருச்செந்தூர் முருகன்கோயில் சுற்று மண்டபம் இடிந்துவிழுந்து ஒரு பெண் காலமானதும், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் தீவிபத்து ஏற்பட்டதும் பக்தர்களின் மனதை பெரியளவில் பாதித்துள்ளது. இறைவன் வாழும் இல்லங்களான கோயில்களில் ஏற்பட்டுள்ள இது போன்ற அசம்பாவிதங்களால் தமிழக மக்களுக்கு எந்தபாதிப்பும் வரக்கூடாது என்பதே ஆன்மிகப் பெரியோரின் கருத்தாக இருக்கிறது.

இதுபோன்ற நேரத்தில் இறைவனிடம் பிரார்த்தனை செய்வதே சிறந்தவழியாகும். எனவே, தை வெள்ளியான பிப்.9-ம் தேதி (நாளை) மாலை அனைத்து இந்துக்களின் வீட்டுவாசல்களிலும் கோலமிட்டு, வீட்டு முன்பு தீபம் ஏற்றி அன்னை மீனாட்சியையும், திருச்செந்தூர் முருக பெருமானையும் தமிழக நலனுக்காக வேண்டுவோம்.

Leave a Reply