சென்னைவந்த பிரதமர் மோடி மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹெலிகாப்டர் மூலம் பார்வை யிட்டார் அப்போது , தமிழக மக்களுக்கு துணையாக இருப்பேன் என தமிழில் பேசி உறுதியளித்தார்.

அடையாறு கடற்படைத் தளத்தில் பிரதமர் நரேந்திர மோடியும், ஜெயலலிதாவும் ஆலோசனை நடத்தினர். சுமார் 20 நிமிடத்திற்கும் மேலாக இந்த ஆலோசனை நீடித்தது. இதில் தமிழகரசின் பல்வேறு கோரிக்கைகளை பிரதமரிடம் முதல்வர் ஜெயலலிதா வலியு றுத்தினார். இதன் பின்னர் பிரதமர் நரேந்திர மோடி, நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பிரதமர் மோடி தமிழில்பேசினார். பிரதமரின் தமிழ் பேட்டி வருமாறு:

தமிழ் நாட்டு மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதை மிகவும் வேதனையோடு பார்க்கிறேன். நான் உங்களுக்கு துணையாக நிற்பேன். மிகவும் அதிகமாகபெய்துள்ள மழையால் ஏற்பட்டுள்ள துயரநிலையையும் பாதிப்புகளையும் நான் பார்வை யிட்டேன்.மிகுந்த தேவைகளுடன் நிற்கும் தமிழக மக்களுக்கு மத்திய அரசு ஆதரவு அளிக்கும். உடனடி நிவாரணத் துக்காக தமிழகத்துக்கு ஆயிரம்கோடி ரூபாயை உடனடியாக வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு நான் உத்தரவிட்டு ள்ளேன்.இதற்கு முன்பு தமிழகத்துக்கு ரூ 940 கோடியை மத்திய அரசு வழங்கியது. இப்போது கூடுதலாக ஆயிரம்கோடி அளிக்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply