தமிழக விவசாயிகளை கர்நாடக அரசு வஞ்சித்தால் பார்த்துக்கொண்டு இருக்க மாட்டோம்.  தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன்,

காவிரி வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீரப்பு வருத்தம் அளிக்கிறது, உச்சநீதிமன்ற வழங்கிய  தீர்ப்பின் அடிப்படையில் 177.26 டிஎம்சி தண்ணீரை கர்நாடக அரசு உடனடியாக வழங்க வேண்டும் இதற்கு முன்னதாக வழங்கிய தீர்ப்பை அவர்கள் முழுமையாக கடைப்பிடிக்கவில்லை எனவே உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி உச்சப்பட்ச  அளவாக தண்ணீரை நமக்கு கொடுக்க வேண்டும்,

இன்றைய சூழ்நிலையில் தமிழக அரசு உச்சப்பட்ச தண்ணீரை பெற தமிழக அரசு உடனே நடவடிக்கை எடுக்கவேண்டும், இதற்கு முன்னால் 50 டிஎம்சி மேல் கர்நாடக அரசு தமிழ்நாட்டுக்கு தண்ணீர் கொடுத்தது கிடையாது இந்த முறையாவது உச்சப்பட்ச அளவை விவசாயிகளுக்கு தந்தாக வேண்டும்,

தமிழக அரசு நமக்கு கிடைக்க வேண்டிய உரிமையை உடனே பெற்றுத்தரவேண்டும், நதிகள் தேசியமயமாக்கப்பட வேண்டும், என்பது நமது கோரிக்கையாக உள்ளது, நதிகள் இணைக்கப்பட வேண்டும்,

என்பது நமது தொலைநோக்கு திட்டமும்  உள்ளது, நமது உரிமையை எந்த விதத்திலும் பறிபோகக் கூடாது, பாதுகாக்கப்பட வேண்டும், தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளை மேம்படுத்த அரசு முயற்சி  மேற்க்கொள்ள வேண்டும்,

விவசாயிகளுக்கு உரிய நீரை பெற்றுதருவதில் இரண்டு மாநில அரசுகளும் முயற்சி மேற்க்கொள்ள வேண்டும், இதனை  தமிழக  பாஜக தொடர்ந்து வலியுறுத்தும், தமிழக விவசாயிகளை கர்நாடக காங்கிரஸ் அரசு வஞ்சித்தால் நாங்கள் பார்த்துக்கொண்டு இருக்க மாட்டோம்.

டாக்டர். தமிழிசை சௌந்தரராஜன்

தமிழக பாஜக தலைவர் 

Leave a Reply