அமித்ஷா இந்தியாவின் பலமே அணைத்து மாநில மொழிகளின் தனித்துவமும் , சிறப்பும் தான் காரணம் என்றார்.மேலும் ஹிந்தி மொழியை கற்பதால், நாட்டின் சகோதரத்துவமும், ஒற்றுமையும், நமக்குள் புரிதல் உணர்வும் ஏற்பட வழி வகுக்கும் என்றார்

அமித்ஷா என்ன சொன்னார் என்றே தெரியாமல். புரியாமல் கடும் விளைவு ஏற்படும் என்கிறீர்கள். அவர் என்னமோ ஹிந்தியை மட்டும் தான் படிக்க வேண்டும் என்று சொல்வது போல கூச்சல் போடுவது, கேடு கெட்ட அரசியல்

ஒரு நாடு ஒரு மொழி மிக நல்ல விசயம். வரவேற்போம். இதனால் நம் தாய் தமிழ் மறைந்து விடும் என்பது ஒரு தவறான எண்ணம். நமது அண்டை மாநிலங்களிள் எல்லாம் ஹிந்தியும் உள்ளது அவர்களின் தாய் மொழியும் நன்கு உள்ளது..

மலையாளிகள் 75 % பேருக்கு ஹிந்தி தெரியும் அங்கு மலையாளம் அழிந்தா போச்சி , தெலுங்கர்கள் 55 % பேருக்கு ஹிந்தி தெரியும் அங்கு தெலுங்கு அழிந்தா போச்சி, கன்னடர்கள் 65 % பேருக்கு ஹிந்தி தெரியும் அங்கு கன்னடம் அழிந்தா போச்சி

இந்தி தெரிந்த தமிழன் திரு அப்துல் கலாம் அவர்கள் விஞ்ஞானி ஆகி விட்டார்

இந்தி தெரிந்த தமிழன் திரு சுந்தர் பிச்சை உயர்ந்த இடத்தை அடைந்தார்

இந்தி தெரிந்த தமிழன் திரு சிவனை அவர்கள் இஸ்ரோ விஞ்ஞானி ஆகி விட்டார்

மோடிக்கு தாய் மொழி குஜராத்தி,, அவருக்கு இந்தி தெரியும் பிரதமர் ஆகி விட்டார்,,

தொலைக்காட்சி பேட்டியில் இஸ்ரோ சிவன் அவர்கள்,, முதலில் நான் இந்தியன் என்று மண்டையில் அடிக்குமாறு சொல்லியுள்ளார். இஸ்ரோவின் வெற்றிக்கு பின் நிறைய மாநிலத்தவர்கள் உள்ளனர் என்றும் சொல்லியுள்ளார். தமிழனால் தான் இஸ்ரோ முன்னேறியது என்று மற்ற மாநில விஞ்ஞானிகளை கேவலப்படுத்தவில்லை .. அப்படியும் மனிதர்கள் இந்தியாவில் இருக்கிறார்கள் ..

ப.சிதம்பரம் 2007 ம் ஆண்டு ஹிந்தியை இந்திய அனைவரிடத்திலும் கொண்டு செல்ல சூளுரைத்தார்.. ஆனால் அப்போது காங்கிரஸ் கூட்டணி திமுக ,, ஒரு மறுப்பு அறிக்கை கூட
கிடையாது.. 2008 ம் ஆண்டு இந்தியை இந்தியா முழுவதும் கொண்டு செல்ல வேண்டும் என்று சொன்ன அதே காங்கிரஸ்வுடன் தான் இந்த திமுக, கூட்டணி,,

ஒரு காலத்தில் கருணாநிதி அவர்களிடம் செய்தியாளர் கேக்குறார்,, இந்த இளம் வயதில் தயாநிதி மாறனை அமைச்சர் ஆக்குகிறீர்களே என்று கேட்ட போது,, அதற்கு அவர் சொன்ன வார்த்தை, தயாவுக்கு இந்தி தெரியும் அதனால் தான் அவனை அமைச்சர் ஆக்குகிறோம் என்றார் ,, அன்றில் இருந்து இன்று வரை தமிழனனை இந்தி படிக்க விடாமல் கெடுத்த கூட்டம் இன்று தமிழை வைத்து கோடி கோடியாக கொள்ளை அடித்தது

இந்தியை எதிர்க்கும் திமுக தலைவர்கள் எல்லாம் தன் வாரிசுகளை திமுகவினர் நடத்தும் CBSE பள்ளிகளில் இந்தி படிக்காமல் உறுதி மொழி கொடுக்க தயாரா ? சரி திமுக தொண்டன் அனைவரும் தன் பிள்ளைகள் இந்தி படிக்காமல் தமிழை மட்டும் தான் படிக்கணும்ன்னு தமிழ் வழி கல்வி கூடங்களில் சேர்ப்பார்களா ?

தமிழக மக்கள் நல்ல நிலைக்கு வர வேண்டுமானால் ஹிந்திக்கு ஆதரவாக தமிழ் நாட்டில் போராட்டம் நடக்க வேண்டும்….

கருணாநிதி குடும்பத்திற்க்கு தமிழ் மக்களை தமிழ், தமிழ் என்று பிரித்தால் தான் மக்களுக்கு வெளி உலகமே தெரியாது,, அதை வைத்தே நம் குடும்பம் வளர்ந்து விடும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை,, அதுவும் நடந்தது ,, ஆனால் இப்போது காலம் மாறுகிறது

தமிழகத்தில் எல்லா மதமும் இருக்கலாம் ஆனால் இந்து மதம் மட்டும் இருக்க கூடாது காரணம் இந்து மதம் வளர்ந்தால் தமிழகத்தை இந்தியாவோடு இணைத்து விடும்

மேலும் இங்கு எல்லா மொழியும் பேசலாம், படிக்கலாம் ஆனால் இந்தி மட்டும் படிக்கக்கூடாது ஏனென்றால் இந்தி, தமிழரை இந்தியாவோடு இணைத்து விடும்

இந்த திராவிட அழிச்சாட்டிய கோஷ்டிகளின் இந்தி எதிர்ப்பு மற்றும் இந்து எதிர்ப்பு தத்துவங்களின் நோக்கம் இதுவே

தமிழன் என்றால் அனைத்து மொழியும் கற்க வேண்டும் அனைத்து துறைகளிலும் திறமை மிக்கவர்களாக இருக்க வேண்டும் அப்படி இருந்தால் தான் தமிழனுக்கு பெருமை

தமிழை வைத்து அரசியல் செய்யும் வியாபாரிகளுக்கு மக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும் ஏமாந்த வரை போதும்… நாம் ஒழிக்கவேண்டியது மக்களுக்கு துரோகம் செய்யும் அரசியல் கட்சிகளை.

இனிமேலாவது தமிழர்கள் தேசியத்தில் இணையட்டுமே. ஒழியட்டும் இந்த பிரிவினைவாத கூட்டம்.

Comments are closed.