தூத்துக்குடி 2020 டிசம்பர் 7 ;தமிழக சட்டமன்றதேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றிபெறும் என்று பா.ஜனதா மாநில தலைவர் எல்.முருகன் கூறினார்.

திருச்செந்தூரில் நடந்த வெற்றிவேல் யாத்திரை நிறைவுவிழாவில் பா.ஜனதா மாநில தலைவர் எல்.முருகன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-தமிழ்கடவுள் முருக பெருமானின் கந்தசஷ்டி கவசத்தை இழிவுபடுத்தியவர்களுக்கு தக்கபாடம் கற்பிக்க வேல் யாத்திரை நடத்தப்பட்டது. கருப்பர் கூட்டம் எனும் கயவர் கூட்டத்தை திமுக. கூட்டணி இயக்குகிறது. இதற்கு தமிழகமக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். பல இடையூறுகளைத் தாண்டி 4 ஆயிரம் கிலோ மீட்டர்தூரம் பயணித்த யாத்திரை திருச்செந்தூரில் நிறைவடைந்துள்ளது. தீயசக்தியான தி.மு.க.வை காவிக்கூட்டம் ஓட ஓட விரட்டும். இது திருச்செந்தூரில் 2-வது சூரசம்ஹாரம் போன்று நடந்துள்ளது.

தமிழக அரசியலில் பா.ஜனதா தவிர்க்கமுடியாத சக்தியாக உள்ளது. விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் விளைப்பொருட்களுக்கு தாங்களே விலைநிர்ணயம் செய்யவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதையே மோடி தற்போது வேளாண்சட்ட திருத்தத்தின் மூலம் நிறைவேற்றி உள்ளார். முன்பு தி.மு.க.வும் இந்த வேளாண்சட்டம் குறித்து தனது தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது. அதனைத்தான் மோடியும் நிறைவேற்றி உள்ளார். ஆனால், தற்போது தி.மு.க. அரசியலுக்காக வேளாண் சட்டங்களை எதிர்க்கிறது.விவசாயிகளின் வாழ்க்கைத்தரம் மேம்பட பிரதமர் நரேந்திரமோடி எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். தமிழகத்தில் இன்னும் 3 மாதங்களில் சட்டமன்றதேர்தல் நடைபெற உள்ளது. தமிழர்களுக்கும், தமிழர்களின் கலாசாரம், பண்பாட்டுக்கும் எதிராக இருப்பவர்களை ஓடஓட விரட்டும் தருணம் வந்துவிட்டது. தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அமோகவெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். ஏராளமான பா.ஜனதா உறுப்பினர்கள் சட்டமன்றத்துக்கு உறுப்பினர்களாக தேர்வுபெறுவார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.