தமிழை ஒவ்வொரு முறையும் பெருமை படுத்த தவறாத நமது பிரதமர் நரேந்திரமோடிக்கு என மனமார்ந்த நன்றிகள் என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்

ஒவ்வொரு மாதமும் ஒரு ஞாயிற்று கிழமை அன்று நாட்டு மக்களுக்கு வானொலி மூலம் மன் கீ பாத் நிகழ்ச்சியில் உரையாற்றுவது பிரதமர் நரேந்திர மோடியின் வழக்கம்.

அந்தவகையில் பிரதமர் நரேந்திர மோடி 62-வது மன்கீ பாத் நிகழ்ச்சியில் இன்று உரையாற்றினார்.

அப்போது அவர் தனது உரையில் “கேரளாவில் பகீரதி என்ற மூதாட்டி 9 வயதில் பள்ளிப்படிப்பை நிறுத்தினார். ஆனால் தற்போது 105 வயதில் 4-ம் வகுப்பு தேர்வு எழுதி 75% மதிப்பெண்களை பெற்றுள்ளார். தமிழ் கவிஞர் ஔவையார் கற்றது கை மண் அளவு, கல்லாதது உலகளவு என கூறியிருக்கிறார் கேரளாவில் பகீரதி மூதாட்டி அனைவருக்கும் முன்மாதிரியானவர். உத்வேகம் அளிக்கக்கூடியவர். அவரை நான் வணங்குகிறேன்” என்றார்.

பிரதமர் மோடியின் மான் கீ பாத்தின் உரையை முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தனதுடுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “தமிழை ஒவ்வொரு முறையும் பெருமைப்படுத்த தவறாத நமது பிரதமர் நரேந்திரமோடிக்கு என் மனமார்ந்த நன்றிகள். மான் கீ பாத் நிகழ்ச்சியில் கற்றது கைமண் அளவு, கல்லாதது உலக அளவு என்று தமிழ் கவிஞர் ஔவையாரின் மேற்கொளை குறிப்பிட்டுள்ளார். ஐக்கியநாடுகள் சபையிலோ அல்லது நாடாளுமன்றத்திலோ தமிழ் இலக்கியங்களை குறிப்பிட்டு பேச மறந்தது இல்லை ” என்று கூறியுள்ளார்.

Comments are closed.