பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாநிலத்திலும் பா.ஜனதா தொண்டர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் கலந்துரையாடி, தொண்டர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். “என் வாக்குச்சாவடி வலுவான வாக்குச்சாவடி” என்ற பெயரில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், கட்சிசார்பில் நியமிக்கப்பட்டுள்ள பூத் கமிட்டி உறுப்பினர்கள் பங்கேற்று வருகிறார்கள்.

அந்தவகையில், தமிழ்நாட்டிலும் கன்னியாகுமரி, கோவை, சேலம், நாமக்கல், நீலகிரி உள்ளிட்ட 5 பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று வீடியோ கான்பரன்சிங் மூலம் கலந்துரையாடி தமிழ்நாட்டில் தேர்தல் பணியை தொடங்கி வைத்தார் என்று தான் கூற வேண்டும். பாஜக அரசு தமிழகத்திற்கு என்னென்ன நன்மைகளை செய்தது என்பதை மிகவும் அழகாக எடுத்து வைத்தார். இதை தமிழக மக்களிடம் கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு பாஜக தொண்டர்களிடமும் உள்ளது என்று கூறினார்

மாலை 4.30 மணிக்கு இந்த நிகழ்ச்சி தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில், ஒவ்வொரு தொகுதியில் இருந்தும் 1,000 பேர் கலந்துகொண்டனர்.

கன்னியாகுமரி மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனும், நாமக்கல்லில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் பங்கேற்றார்கள்.. நிகழ்ச்சியில் பங்கேற்கும் நிர்வாகிகள், தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து தங்கள் கருத்துகளை பிரதமர் மோடியிடம் எடுத்துரைத்தனர்.

One response to “தமிழ்நாட்டில் தேர்தல் பணி தொடங்கியது”

Leave a Reply