தமிழ்நாட்டின் நிலத்தடி நீர் வளத்தை அதிகரிக்க பாலாறு மற்றும் பெண்ணையாறு நதி நீர் இணைப்புத் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உற்பத்தி யாகும் பாலாறு, பெண்ணாறு ஆகியவை வங்கக் கடலில் போய் சங்கமிக் கின்றன. கடலில் வீணாகும் நீரை திசை திருப்பி பயன்படுத்த ஆறு ஆண்டுகளாக நடத்திய ஆய்வுகளுக்குப்பின் மத்திய நீர்வளத் துறை அமைச்சகம் தமிழக அரசுக்கு பாலாறு -பெண்ணையாறு இணைப்புத் திட்டத்தை நிறைவேற்றக் கோரி பரிந்துரைசெய்து , அறிக்கையை அளித்துள்ளது.

இதற்காக 648 கோடி ரூபாய் மதிப்பில் இத்திட்டம் நிறைவேற்றப்பட மத்திய அரசு தேசியநீர்வள ஆணையத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

பாலாறு 50 குடிநீர்த் திட்டங்களுக்கு ஆதாரமாக உள்ளது. தாம்பரம், பல்லாவரம் ஆகிய பகுதிகளும் இதில் உள்ளடக்கம். இத்திட்டத்தின் மூலம் வெள்ளப்பெருக்கு காலங்களில் பெண்ணையாற்றில் இருந்து 3 டிஎம்சி உபரிநீர் பாலாற்றில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இணைப்புக்கால்வாய் வழியாக திருப்பிவிடப்படும்.

இத்திட்டத்தால் சுமார் ஒன்றரை லட்சம் பேருக்கு குடிநீர் வசதி மற்றும் 9 ஆயிரத்து 850 ஹெக்டர் நிலங்களுக்கு பாசன வசதி கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply