சென்னை ஐஐடி., பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக,சென்னை வந்த பிரதமர் மோடியை  முதல்வர், அமைச்சர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது தொண்டர்களிடையே பேசிய மோடி,

சென்னைக்கு வரும்போதெல்லாம் மகிழ்ச்சி கொள்கிறீர்கள். பிரதமராக 2வது முறை பதவியேற்ற பிறகு முதல்முறையாக சென்னை வந்துள்ளேன். ஐஐடி பட்டமளிப்பு விழாவிற்கு வந்த எனக்கு பெருந்திரளாககூடி நீங்கள் வரவேற்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அமெரிக்காவில் தமிழர்கள் சிறப்பாக வரவேற்பு அளித்தனர். தமிழ்மொழி பழமையான மொழி என அமெரிக்காவில் கூறினேன். அதுதான் ஊடகங்களில் பேசப்படுகிறது. இந்தியா குறித்து அமெரிக்காவில் நிறைய எதிர்பார்ப்பு உள்ளது. ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பயன்பாட்டை நிறுத்த வேண்டும். அதனால் நிறைய பிரச்னைகள் ஏற்படுகிறது. மற்ற பிளாஸ்டிக்பொருட்களை பயன்படுத்தலாம். காந்தியின் 150 வது பிறந்தநாளில் பாதயாத்திரை மேற்கொள்ள உள்ளோம். அந்நாளில் அனைத்துதரப்பு மக்களிடமும் அரசின் கொள்கைகளை கொண்டுசேர்க்க வேண்டும் என்றார்.

Comments are closed.