மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை மற்றும் கப்பல்துறை அமைச்சர் மாண்புமிகு பொன்.இராதாகிருஷ்ணன் அவர்களின் பத்திரிகை செய்தி

 

நாடு முழுவதும் பாஜக கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்தி பெரும்பாலான மாநிலங்களில் பாஜகவின் ஆட்சி அமைய காரணமாக இருந்தவரும்  அரசியலில் புதிய வெற்றி சூத்திரத்தை உருவாக்கியவருமான பாஜக தேசியத்தலைவர் திரு.அமீத்ஷா அவர்கள் கட்சியின் தேசியத்தலைவராக 3 ஆண்டுகள் நிறைவு செய்ததை வாழ்த்துவதுடன் அதேநாளில் குஜராத் மாநிலத்திலிருந்து ராஜ்யசபா உறுப்பினராக நேற்று (8/8/2017) தேர்ந்தெடுக்கப்பட்டது இரட்டிப்பு மகழ்ச்சியைத் தருகிறது.

 

தர்மம் தொடர்ந்து வெல்கிறது, தாயகம் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் பயணிக்கிறது. பிரதமர் திரு.நரேந்திரமோடி அவர்கள் உருவாக்கும் அரசியல் சரித்திர அத்தியாயத்தில் முதல் பக்கம் நேற்றைய அமீத்ஷா அவர்களின் வெற்றி.

 

திரு. அமீத்ஷா அவர்கள் மற்றும் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் திருமதி.ஸ்மிருதி இராணி ஆகியோர் ராஜ்யசபா உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதற்கு எனது உளப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

– பொன். இராதாகிருஷ்ணன்

Leave a Reply