முஸ்லிம்களில் மூன்று முறை, 'தலாக்' கூறி விவாகரத்து பெறுவதை குற்ற மாக்கும் சட்டத் துக்கான மசோதா, நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் நிறைவேறும்,'' என, பிரதமர், நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

'முஸ்லிம்களில் மூன்று முறை, 'தலாக்' கூறி விவாகரத்து பெறும் நடைமுறை சட்டவிரோதமானது' என, உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இருப்பினும், அந்த நடைமுறை தொடர்வதால், தலாக்கூறி விவாகரத்து பெற்றால், மூன்று ஆண்டு சிறை தண்டனை விதிக்கும் வகையில், புதியசட்டம் இயற்ற முடிவு செய்யப் பட்டுள்ளது. இதற்கான மசோதா லோக்சபாவில் நிறைவேறியுள்ளது; ராஜ்ய சபாவில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாளான நேற்று, பார்லி., வளாகத்தில் நிருபர்களிடம், பிரதமர் நரேந்திரமோடி கூறியதாவது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தும், தலாக்முறை தொடர்வதால், அதில் இருந்து முஸ்லிம் பெண்களை காப்பாற்றும் வகையில், தலாக்தடுப்பு மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த கூட்டத்தொடரிலேயே இது நிறைவேறியிருக்க வேண்டும். முஸ்லிம் பெண்களின் மரியாதையை, கவுரவத்தை காக்கும்வகையில், இந்த மசோதாவை நிறைவேற்ற, எதிர்க் கட்சிகள் ஒத்துழைப்பு தர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply