கேரள மாநிலம் எர்ணா குளத்தை அடுத்த பெரும்பாவூரில் உள்ள ஒருவீட்டில் கடந்த மாதம் 28-ந்தேதி 30 வயது மதிக்கத் தக்க இளம்பெண் ஒருவர் மர்மமான முறையில் இறந்துகிடந்தார். இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அந்தபெண் சட்டக் கல்லூரியில் படித்து வந்த தலித்மாணவி என்பதும், அவர் கற்பழிக்கப்பட்டு கொடூரமான முறையில் கத்தியால் பல இடங்களில் குத்தி கொலை செய்யப் பட்டதும் தெரியவந்தது.

இந்நிலையில், இந்தசம்பவத்தை கண்டித்து கேரளாவில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளது. திருவனந்த புரத்தில் உள்ள கேரள தலைமை செயலகத்தினை முற்றுகையிட்டு ஜனநாயக பெண்கள் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே எர்ணா குளத்தில் மாணவி கற்பழிப்பை கண்டித்து இடதுசாரி ஜனநாயக இளைஞர் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் துணை காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பா ட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தடியடிநடத்தி கலைக்க முயன்றனர். தேவையில்லாமல் இந்தவழக்கில் தாமதம் காட்டப் படுவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம்சாட்டினர்.

இதனிடையே பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத் தினருக்கு கேரள அரசு ரூ.10 லட்சம் நிவாரணத்தொகை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

இந்தவிவகாரம் குறித்து மக்களவையில் பாஜக. உறுப்பினர் மீனாட்சி லெஹி குரல் எழுப்பினார். இதுகுறித்து மாநிலங்களவையில் பேசிய அவை துணைத்தலைவர் குரியன், “இது மிக, மிக கொடியகுற்றம். அனைத்து கேரள மக்களுக்கும் வெட்கக் கேடானது” என்றார்.

Leave a Reply