அமெரிக்க அதிபர்டிரம்ப், ஆக்ராவில் உள்ள ‘காதல் சின்னம்’ தாஜ்மகாலை மனைவியுடன் பார்வை யிட்டார்.

இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், ஆமதாபாத்தில் உள்ள சர்தார்படேல் மைதானத்தை திறந்துவைத்து ஒருலட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களுக்கு மத்தியில் உரையாற்றினார். அதன் பின்னர், ஆக்ராவில் உள்ள உலக அதிசயங்களுள் ஒன்றான தாஜ் மகாலை பார்வையிட ஆமதாபாத்தில் இருந்து ஆக்ராவிற்கு புறப்பட்டார். ஆக்ரா விமான நிலையத்தில் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியாவை உத்தரபிரதேச கவர்னர் ஆனந்திபென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத் வரவேற்றனர்.

விமான நிலையத்தில் 3000 நடனக்கலைஞர்கள் பங்கேற்ற மயிலாட்டம், பொய்க்கால் குதிரை யாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் அவருக்கு உற்சாகவரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து தாஜ்மகாலை காண சென்றார். 10 கி.மீ., தூரபயணத்தில் 31 ஆயிரம் பள்ளி மாணவர்கள் வரவேற்றனர். ஆண்டுக்கு 80 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்துசெல்லும் தாஜ்மகாலில் டிரம்ப் வருகையால் சுற்றுலாபயணிகள் செல்ல தடை விதிக்கப் பட்டுள்ளது. டிரம்ப் மகள் இவாங்கா, மருமகன் ஜேரட் குஷ்னர் ஆகியோரும் தாஜ் மகாலை பார்வையிட்டனர்.

தாஜ்மகாலின் நுழைவில் உள்ள பதிவேட்டில் டிரம்ப் மற்றும் மெலனியா தங்களது வருகையை பதிவுசெய்தனர். அந்த பதிவேட்டில், ‘தாஜ்மகால் பிரமிப்பை தூண்டுகிறது, இந்திய கலாச் சாரத்தின் செழுமையான மற்றும் பல்வேறு கலாசார, காலங்களை கடந்து நிற்பதற்கு சான்று! நன்றி, இந்தியா,’ என எழுதி கையொப்பமிட்டனர்.

Comments are closed.