தான்சானியா அதிபர் மாளிகையில், தனக்கு அளிக்கப்பட்ட வரவேற்பை தொடர்ந்து, தான் சானியா அதிபருடன் இணைந்து, அந்நாட்டின் பாரம்பரிய டிரம்ஸ் இசைத்துஅசத்தினார் மோடி.

அதிபர் மாளிகையில் நடை பெற்ற வரவேற்புநிகழ்ச்சியின் போது, பிரதமர் மோடியும் தான்சானியா அதிபர் மகுபுலியும் மரத்தாலான டிரம்ஸ் வாசித்தது அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது. ஒரு கட்டத்தில் மகுபுலி டிரம்ஸ் வாசிப்பதை நிறுத்தினார். ஆனால் மோடி தொடர்ந்து வாசித்ததை கவனித்தஅவரும் தொடர்ந்து டிரம்ஸ் வாசித்தார்.

இதற்கு முன்பு கடந்த 2014-ம் ஆண்டு ஜப்பானுக்கு சென்ற பிரதமர் மோடி, இசைக்கலைஞர்களுடன் இணைந்து டிரம்ஸ் வாசித்தார். அப்போது, இசை கலைஞர்களுக்கு கடும்போட்டியைக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply