கொரோனா தொற்று பரவலை ஒட்டி நாடுமுழுவதும் பொது முடக்க நிலை அறிவிக்கபட்டது. இந்நிலையில் வாரணாசி மக்களுக்கு, அங்குள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், அதன் உறுப்பினர்களும் தமதுசொந்த முயற்சிகளாலும், மாவட்ட நிர்வாகத்திற்கு உதவிசெய்தது மூலமாக ஒவ்வொருவருக்கும் உணவு கிடைப்பதை உறுதிசெய்தது. இதனை பிரதமர் நரேந்திர மோடி இன்று வெகுவாக பாராட்டி உள்ளார்.

காணொலி மூலம், தன்னார்வ அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் உரையாடிய பிரதமர் மோடி, இடர்பாடான காலகட்டத்தில், வெளியேவந்து பணியாற்றியவர்கள் தங்களுடைய கடமையில் மட்டுமல்ல, மாறாக மிகப்பெரிய அச்சம் நிலவும் இந்தசூழ்நிலையில், தாமாக முன்வந்து பணியாற்றியது சேவையின் புதுவடிவம் என பாராட்டு தெரிவித்துள்ளார். அப்போது அவர், காசியில் 8 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித்திட்டங்கள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

Comments are closed.