பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று 67-வது பிறந்த தினமாகும். ஒவ்வொரு ஆண்டும் தான்பிறந்த தினத்தன்று, பூர்வீக கிராமத்துக்கு சென்று தாயைசந்தித்து ஆசிபெறுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

அதன்படி பிரதமர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை டெல்லியில் இருந்து புறப்பட்டு குஜராத்வந்தார். ஆமதாபாத் விமான நிலையத்தில் அவருக்கு பா.ஜ.க தலைவர்கள் மிகவும் உற்சாகவரவேற்பு கொடுத்தனர். அங்கிருந்து அவர் பலத்த பாதுகாப்புடன் காந்தி நகரில் உள்ள தனது, சொந்த ஊருக்குசென்றார்.

அங்கு தனது சகோதரர் வீட்டில் தங்கியிருக்கும் தாயார் ஹிராபாயை மோடி சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து பெற்றார். தாயின் காலில் விழுந்து அவர் வணங்கினார். அவருக்கு தலையில் தொட்டு ஆசிவழங்கிய ஹிராபாய் வாயில் இனிப்பும் ஊட்டி விட்டார். இதையடுத்து சிறிதுநேரம் அவர் தாயாருடன் பேசிக் கொண்டிருந்தார்.

பூர்வீக வீட்டை சுற்றிப்பார்த்த பிரதமர் மோடி அங்கு தன் உறவினர்கள் சிலரையும் சந்தித்துப்பேசினார். அவர்களிடம் அவர் உடல் நலம் பற்றி விசாரித்தார்.

சிறிதுநேரம் கழித்து தனது வீட்டில் இருந்து பிரதமர் மோடி புறப்பட்டார். நர்மதா அணைக்கட்டை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க அவர் புறப்பட்டு சென்றார்.

Leave a Reply