திடீரென வரும் நடிகர்கள் எல்லாம் கலைஞர், ஜெயலலிதா இடத்தை நிரப்பமுடியாது எனத் தமிழிசை சௌந்தர ராஜன் தெரிவித்துள்ளார். 

ராமநாத புரத்தில் நடைபெறும் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மதுரை விமான நிலையம் வந்த தமிழக பாஜகவின் மாநில தலைவர் தமிழிசை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “பாஜ.கட்சியை பலப்படுத்த தலைவர்கள் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து வருகிறோம்.

திமுக தலைவர் கலைஞர் மறைவுக்குப்பின் மீண்டும் இன்று முதல் கட்சி நிகழ்ச்சிகள் தொடங்கியுள்ளன. கலைஞர், ஜெயலலிதா இல்லாத ஒருஅரசியல் களத்தை 50 ஆண்டுகளுக்கு பிறகு காண்கிறோம். இவர்கள் இடத்தைநிரப்ப திடீரென வரும் நடிகர்கள் எல்லாம் அந்த வெற்றி இடத்தை நிரப்பமுடியாது. ஜெயலலிதா கலைஞர் இவர்கள் எல்லாம் போராடிதான் உயர்ந்த இடத்திற்கு வந்துள்ளனர்” என்று கூறினார்.

Leave a Reply