மஹாராஷ்டிர  அரசியலில் ஏற்பட்டுள்ள திடீர் திருப்பம் துரோக அரசியலுக்கு ஒரு பாடமாக  அமைந்துள்ளது. அங்கு . பா.ஜ., தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. முதல்வராக பா..ஜ.,வின் பட்னவிசும், துணை முதல்வராக தேசியவாத காங்கிரசின் அஜித்பவாரும் பதவியேற்று கொண்டார். இது அமித்ஷாவின் ராஜதந்திரத்திற்கு கிடைத்த வெற்றியாகும்.

மஹாராஷ்டிராவில், சமீபத்தில் நடந்த சட்ட சபை தேர்தலில், பா.ஜ.க,வும், அதன் கூட்டணி கட்சியாக இருந்த சிவசேனாவும், அதிகதொகுதிகளில் வெற்றிபெற்றும், கருத்து வேறுபாடு காரணமாக ஆட்சி அமைக்க முடியவில்லை. இதையடுத்து, இந்த இருகட்சிகளுக்கு இடையேயான கூட்டணி முறிந்தது. மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப் பட்டது. தொடர்ந்து, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சிஅமைக்க சிவசேனா முயற்சிசெய்தது. இதற்கு சோனியாவும் சம்மதித்து விட்டதாக தகவல் வெளியானது. இதுதொடர்பாக காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா தொடர்ந்து ஆலோசனை நடத்திவந்தது. இதில் ஒருமித்த முடிவு ஏற்பட்டதாகவும், உத்தவ் தாக்கரே முதல்வராக பதவியேற்பார் எனவும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், மஹா.,அரசியலில், யாரும் எதிர்பாராத தலைகீழ்திருப்பம் ஏற்பட்டது. பா.ஜ., – தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இடையே கூட்டணி ஏற்பட்டது. பா.ஜ.,வின் தேவேந்திர பட்னவவிஸ் முதல்வராகவும், தேசியவாத காங்கிரசின் அஜித்பவார் துணை முதல்வராக பதவியேற்று கொண்டார். அவர்களுக்கு கவர்னர் பகத்சிங் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இன்று இருவர் மட்டுமே பதவியேற்று கொண்டனர். அமைச்சர்கள் யாரும் பதவியேற்கவில்லை.

இதனிடையே அஜித் பவாரின் முடிவு கட்சியின் முடிவல்ல. அவரின் தனிப்பட்ட முடிவு என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் அறிவித்துள்ளார்.

யாருக்கு எத்தனை பேர் ஆதரவு :

பா.ஜ., – 105 + தேசியவாத காங்., – 54. மொத்தம் – 159
இது தவிர சுயேட்சைகள் 29 பேரில் 12 பேர் ஏற்கனவே பா.ஜ.,வுக்கு ஆதரவை தெரிவித்திருந்தனர். இதனால் 105+54+ 12 = 171
காங் – 44
சிவசேனா – 56

Comments are closed.