திமுக – காங்கிரஸ் கூட்டணி தொடருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் என மத்திய இணை அமைச்சர் பொன் ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமையகமான கமலாலயத்தில் சட்ட மன்ற தேர்தலில் போட்டியிடவிரும்பும் கட்சியினரிடம் விருப்பமனுக்கள் இரண்டாவது நாளாக இன்றும் பெறப்பட்டு வருகிறது. 

மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தராஜன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் விருப்பமனுக்களைப் பெற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொன் ராதாகிருஷ்ணன், காங்கிரஸ் கட்சி தங்களுடைய மோசமான நிலையை அறிந்து தான் அவசரப்பட்டு திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளதாக தெரிவித்தார். 

காங்கிரசை திமுக தொடர்ந்து கூட்டணியில் வைத்துக் கொள்ளுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் தமிழகத் தேர்தலை ஒட்டுமொத்த இந்தியாவும் ஆர்வத்துடன் கவனிக்கிறது. அரசுக்கு சார்பான காவல்துறை அதிகாரிகளை தேர்தல்பணிகளில் பங்கேற்க அனுமதிக்க கூடாது. கட்சிசார்பான அரசு ஊழியர்களை தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தக்கூடாது
 

மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தனது துறைசார்ந்தே சென்னைக்கு வந்தார். மத்திய அமைச்சர்கள் இப்படியாக சென்னைக்கு வந்துசெல்வது இயல்பானதாகும். இதற்கு அரசியல் சாயம் பூசக் கூடாது. என்ற ராதாகிருஷ்ணன், எந்தகட்சியின் கூட்டணி நிலைப்பாட்டிற்காகவும் பாஜக காத்திருக்கவில்லை என்றார்.

Leave a Reply