இன்று பிறந்த நாள் கொண்டாடும் திமுக., தலைவர் கருணாநிதிக்கு மத்தியஅமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள  வாழ்த்துசெய்தியில் கூறியிருப்பதாவது,
 
தமிழக வரலாற்றில் அசைக்கமுடியாத இடத்தை பிடித்து சாதனை பலபடைத்துள்ள தாங்கள் அகவை 93 அடைந்திருப்பதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன். தாங்கள் மேலும்பல்லாண்டு வாழ்ந்து சாதனைகள் பல படைக்க அன்னை பராசக்தி அருள்புரிய பிரார்த்திக்கிறேன்.
 
திராவிடமுன்னேற்ற கழக ஸ்தாபகத் தலைவர்களில் ஒருவராக துவங்கி அக்கட்சியின் வளர்ச்சியில் பெரும்பங்காற்றி 1967-ல் ஆட்சியை கைப்பற்றினீர்கள். 1969-ல் முதல்வராகி ஐந்துமுறை அப்பதவியை அலங்கரித்து தாங்கள் எழுத்துலகிலும், கலையுலகிலும் பணிபுரிந்து சாதனைகள் படைத்துள்ளீர்கள்.
 
சாதனைபடைக்க வயது ஒரு தடையில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலில் அதிகவாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று  சட்டமன்ற உறுப்பினராக திகழ்கிறீர்கள்.அன்னை சக்தி அருளால் தாங்கள் உடல் ஆரோக்கியமும், எல்லா நலன்களும் பெற்று பல்லாண்டுவாழ பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அந்த வாழ்த்து செய்தியில் கூறப்பட்டுள்ளது.

Tags:

Leave a Reply