திரிபுராவை போல், தமிழகத்திலும் பா.ஜ.,வுக்கு வெற்றிகிடைக்க வேண்டும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த பாரதிய ஜனதா, நிர்வாகிகளுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:

காங்கிரசின் ஜனநாயக விரோத முறைக்கு சரியானபதில், ஜனநாயகத்தை வலுப்படுத்துவதே. ஜனநாயகத்திற்கு தகவல் மற்றும் விழிப்புணர்வு ஆகியவை முக்கியம். காங்கிரஸ் மற்றும் அதன் அபாயகரமான விளை யாட்டு குறித்து மக்களிடம் எடுத்துக்கூற வேண்டும்.தேர்தலுக்கு முன்னர் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரம்குறித்து கேள்வி எழுப்பி, அதன்மீது சந்தேக பார்வையை எழுப்ப முயற்சிப்பார்கள். ஆனால், தேர்தலுக்கு பின்னர், காங்கிரஸ் வெற்றிபெற்றால், எந்திரங்களை ஏற்றுக் கொள்வார்கள்.

ராணுவம், சிஏஜி உள்ளிட்ட அனைத்து அமைப்புகளையும் காங்கிரஸ் அவமான படுத்தியுள்ளது. சமீபத்தில், சுப்ரீம் கோர்ட் வழங்கியதீர்ப்பை அக்கட்சி விரும்பாத காரணத்தினால், அதுகுறித்து கேள்வி எழுப்பியது. முன்னர், கோர்ட்டை மிரட்டியதுடன் மட்டுமல்லாமல், பதவிநீக்கம் செய்யப்போவதாக கூறி அச்சுறுத்தியது.அவசரகால நிலையை பிரகடனப்படுத்திய காங்கிரஸ் கட்சி இப்போது பாரதிய ஜனதா,வை குறை கூடுகிறது.

திரிபுரா மாநிலத்தை போன்று தமிழகத்திலும் பாரதிய ஜனதா., வெற்றி பெற வேண்டும். நாட்டின் ஜனநாயகத்தை கட்டிகாப்பவர்கள் மக்களதான். இதனால், காங்கிரஸ்., தந்திரத்தால் அதை அழிக்கபார்க்கிறது.

ஜனநாயக்தை உதாசீனப்படுத்திவந்த காங்கிரஸ் கட்சி., தற்போது மத்திய அரசு மீது குறைசொல்கிறது. பாஜவை வலுப்படுத்த சம்பந்தப்பட நிர்வாகிகள் தங்களின் பூத் பகுதிக்கு சென்று தேர்தல் பணியாற்ற வேண்டும்.

இளைஞர்கள், முதியோர், பெண்கள் போன்ற அனைத்து தரப்பு மக்களிடமும் நமது அரசின் சாதனைகளை கொண்டு செல்ல, நமது பாரதிய ஜனதா காரிய கர்த்தாக்கள் கடுமையாக உழைக்க வேண்டும். மக்களுடனான தொடர்புகளை அதிகரிக்க வேண்டும்.பிரதம மந்திரியின் வீடு திட்டங்கள், மருத்துவ காப்பீட்டு திட்டங்கள், காதல் சுகாதாரத் திட்டங்கள் உள்ளிட்ட மத்திய அரசின் திட்டங்களை நமது பூத்தில் உள்ள மக்கள் ஒவ்வொருவரிடமும் எடுத்துச் செல்ல வேண்டும். மத்திய அரசு சாமானியனின் நன்மைக்காகவே கடுமையாக உழைக்கிறது என்பதை எடுத்து சொல்ல வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply