திரிபுரா மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்ட சபை தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து இன்று பிரதமர் மோடி முதல்கட்டமாக பிரச்சாரம் செய்யவுள்ளார்.

திரிபுரா மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை யிலான இடதுசாரி முன்னணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநில சட்ட சபையில் உள்ள 60 இடங்களுக்கான தேர்தல் பிப்ரவரி 18-ம் தேதி நடைபெறுகிறது. காங்கிரஸ், பா.ஜ.க. சார்பில் வேட்பாளர்களை அறிவித்து தேர்தல்வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். மொத்தம் 60 தொகுதிகளில் பா.ஜ. 51 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.

இந்நிலையில், திரிபுரா சட்டசபை தேர்தலுக்கு பிரதமர் மோடி, தேசியதலைவர் அமித்ஷா உள்பட முக்கிய தலைவர்கள் பிரசாரம் செய்யவுள்ளனர் என மாநில பா.ஜ.க.வினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக மாநில பா.ஜ.க.வினர் கூறுகையில், திரிபுரா சட்ட சபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து இன்று பிரதமர் மோடி முதல்கட்டமாக பிரச்சாரம் செய்யவுள்ளார். மேலும், இரண்டாம் கட்டமாக பிப்ரவரி 13, 15-ம் தேதிகளில் பிரசாரம்செய்ய உள்ளார்.

மேற்கு திரிபுராவின் சோனா முராவிலும், வடக்கு திரிபுராவின் கைலாஷ்ஹார் என்ற இடத்திலும் நடக்க உள்ள பிரசாரகூட்டத்தில் மோடி கலந்துகொள்கிறார். பின்னர், மீண்டும் தலை நகர் அகர்தாலாவில் நடக்க உள்ள பிரசார கூட்டத்தி்ல் பங்கேற்கிறார்.

மோடி வருகையை யொட்டி திரிபுராவின் சர்வதேச எல்லைபகுதி சீல் வைக்கப்பட்டு பி.எஸ்.எப். வீரர்கள் கண்காணித்து வருகி்ன்றனர்.

இதேபோல், தேசியதலைவர் அமித்ஷா, பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன், உ.பி. முதல் மந்திரி யோகி ஆதித்யநாத், சாலை போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்கரி உள்பட பல்வேறு மந்திரிகளும் தேர்தல்பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளனர் என தெரிவித்துள்ளனர்.

பதிவாகும் வாக்குகள் மார்ச் 3-ம் தேதி எண்ணப்பட்டு அன்று மாலைக்குள் முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

Tags:

Leave a Reply