திரிபுரா மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சித்தேர்தலில் அனைத்து வார்டுகளிலும் பாஜ கட்சி வெற்றி பெற்றுள்ளது.

திரிபுராவின் 11 நகராட்சி மற்றும் 4 மாநகராட்சிகளுக்கு நேற்று (வியாழக் கிழமை) உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதன்முடிவுகள் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியானது. தேர்தல் நடைபெற்ற 11 நகராட்சி மற்றும் 4 மாநகராட்சியின் அனைத்துமேயர் மற்றும் தலைமைப் பொறுப்புகளை பாரதிய ஜனதா கட்சி கைப்பற்றியுள்ளது.

இதனையடுத்து திரிபுரா மாநில முதலமைச்சர் பிப்லாப்குமார் தேபுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

Leave a Reply