திரிபுரா மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான இடதுசாரி முன்னணி ஆட்சி நடைபெற்றுவருகிறது. இம்மாநில சட்டசபையில் உள்ள 60 இடங்களுக்கான தேர்தல் பிப்ரவரி 18-ம்தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுதாக்கல் இன்றுடன் முடிவடைகிறது. காங்கிரஸ், பாஜக. சார்பில் வேட்பாளர்களை அறிவித்து தேர்தல்வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

இந்நிலையில், திரிபுரா சட்டசபை தேர்தலுக்கு பிரதமர் மோடி, தேசியதலைவர் அமித்ஷா உள்பட 40 தலைவர்கள் பிரசாரம் செய்யவுள்ளனர் என மாநில பாஜக.தெரிவித்துள்ளது.

 

இதுதொடர்பாக மாநில பா.ஜ.க.வினர் கூறுகையில், தேசிய தலைவர் அமித் ஷா பிப்ரவரி 11-ம் தேதியும், பிரதமர் மோடி பிப்ரவரி 8 மற்றும் 13, 15-ம் தேதிகளில் பிரசாரம்செய்ய உள்ளனர். ஸ்மிருதி இரானி 5-ம் தேதியும், ராஜநாத் சிங் 7-ம் தேதியும் பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர்.

 

இதேபோல், பாதுகாப்புதுறை மந்திரி நிர்மலா சீதாராமன், உபி முதல் மந்திரி யோகி ஆதித்யநாத், சாலை போக்குவரத்து துறை மந்திரி நிதின்கட்கரி உள்பட பல்வேறு மந்திரிகளும் தேர்தல்பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளனர் என தெரிவித்துள்ளனர்.

 

பிப்ரவரி 18-ம் தேதி பதிவாகும் வாக்குகள் மார்ச் 3-ம் தேதி எண்ணப்பட்டு அன்று மாலைக்குள் முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது

Leave a Reply