திரிபுராவில், மார்க்.கம்யூ., ஆதிக்கத்தை, பா.ஜ.க, முடிவுக்கு கொண்டுவந்துள்ளது. நாகாலாந்தில், பா.ஜ., கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் நிலையில் உள்ளது. திரிபுரா, நாகாலாந்தில், பா.ஜ., ஆட்சி அமைக்க காரணமான தலைவர்கள்பற்றிய ஓர் அலசல்:

 

ஹிமந்தா பிஸ்வா சர்மா; அசாமைச்சேர்ந்த இவர், காங்கிரசில், 10 ஆண்டுகளுக்கும் மேல், முக்கிய பொறுப்புகளை வகித்தார். 2015ல், காங்., மூத்த தலைவரும், அப்போதைய, அசாம் முதல்வருமான, தருண் கோகோயுடன் மோதல் ஏற்பட்டதை அடுத்து, ஹிமந்தா, பா.ஜ.,வில் ஐக்கியம் ஆனார்.
அந்த ஆண்டு நடந்த சட்ட சபை தேர்தலில், பா.ஜ., வெற்றி பெறுவதற்கான வியூகங்களை வகுத்ததில், முக்கியபங்கு வகித்தார். அசாமில், பா.ஜ., ஆட்சியை பிடித்ததை அடுத்து, நாகாலாந்து, திரிபுரா, மேகாலயா மாநிலங்களில், பா.ஜ.,வை வெற்றி பெறச்செய்யும் பொறுப்பு, ஹிமந்தாவுக்கு வழங்கப்பட்டது.
இவர், காங்கிரசில் இருந்து விலகிய, பல மூத்த தலைவர்களை, பா.ஜ.,வில் சேர்த்து, கட்சியை பலம் பெறச்செய்தார். கட்சிக்கு நிதி திரட்டும் ஆற்றல், ஹிமந்தாவுக்கு இருந்தது, பா.ஜ.,வுக்கு கூடுதல் பலத்தை அளித்தது.

ராம் மாதவ்

பா.ஜ., பொதுச் செயல ரான, ராம் மாதவ், கட்சியின் தேசியத் தலைவர், அமித் ஷாவின் நம்பிக்கை நட்சத்திரம். ஒருங்கிணைப்பாளரான இவர், முக்கிய பிரசாரகர்கள் அடங்கிய குழுவை உருவாக்கினார். ஜம்மு – காஷ்மீர் முதல், நாகாலாந்து வரை, பா.ஜ., கூட்டணிகளின் பின்னணியில், ராம் மாதவ் உள்ளார்.

 

பிப்லப் குமார் தேவ்

திரிபுராவில், பா.ஜ., சார்பில், புதியமுதல்வராக தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்புள்ளவராக, பிப்லப் குமார் தேவ் திகழ்கிறார். இவர், திரிபுரா, பா.ஜ.க, தலைவர். ஆர்.எஸ்.எஸ்.,சில் இருந்து வந்த இவர், திரிபுரா, பா.ஜ.,வின் முகமாக கருதப்படுகிறார்.தேர்தலில், வீட்டுக்குவீடு சென்று, பிப்லப்செய்த பிரசாரத்தின் பலனாக, அங்கு, பா.ஜ., ஆட்சியை கைப்பற்றி உள்ளது. காங்கிரசை சேர்ந்த, எம்எல்ஏ., சுதிப் ராய் பர்மன் உட்பட, பல மூத்த தலைவர்களை, பா.ஜ.,வில் சேர்த்தவர், பிப்லப்.

சுனில் தியோதர்

ஆர்.எஸ்.எஸ்.,சில் மூத்த தலைவராக திகழ்ந்தவர், சுனில் தியோதர்; மேகாலயாவில், பா.ஜ., வளர்ச்சிபெற அரும்பாடுபட்டவர். பிப்லப் குமார் தேவை, அரசியல் களத்தில் ஈடுபடச் செய்தவரும், இவரே.

Leave a Reply