தமிழக சட்டமன்றதேர்தல் வரும் மே 16ம்தேதி நடக்கிறது. இதில் பாஜக தனித்து போட்டி யிடுவதாக அறிவித்து முதல் கட்டமாக 50 வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலை யொட்டி, கட்சியின் தேசியதலைவர் அமித்ஷா கலந்துகொள்ளும் பிரசார பொதுக் கூட்டம் வரும் 13ம் தேதி தென்னூர் உழவர்சந்தை மைதானத்தில் நடப்பதாக இருந்தது. இதற்காக நேற்றுகாலை 10.30 மணிக்கு பூமி பூஜையும் நடந்தது. ஆனால் பூமி பூஜை முடிந்த சிறிது நேரத்தில் கூட்டம் நடத்தும் இடம், பொன் மலை ஜி கார்னருக்கு மாற்றப் பட்டது. இது குறித்து பாஜகவினர் கூறும்போது, ‘கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது, ஜிகார்னர் மைதானத்தில்தான் மோடி பேசினார். அதன் பிறகு மத்தியில் பாஜக ஆட்சியைபிடித்தது. அந்த சென்டிமென்ட்டால் இப்போதும் இடம் மாற்றப்பட்டுள்ளது’ என்றனர்.

Leave a Reply