திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகே உள்ள புதுப்பாளையம் பிரிவில் நாளை பிரதமர் நரேந்திரமோடி கலந்துகொள்ளும் பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் கோவை, திருப்பூர், நீலகிரி, பொள்ளாச்சி, சேலம், கரூர், ஈரோடு, நாமக்கல் ஆகிய 8 பாராளுமன்ற தொகுதிநிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொள்கிறார்கள்

இதற்காக அந்தபகுதியில் சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் மைதானம் தேர்வுசெய்யப்பட்டு மேடை அமைக்கும் பணி வேகமாக நடந்துவருகிறது. அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்க தனியாக மேடை அமைக்கும்பணி நடந்துவருகிறது. முதலில் பிரதமர் மோடி நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். பின்னர் காரில்சென்று அருகே நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

நலத்திட்ட உதவிகள் வழங்கும்விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், கவர்னர் பன்வாரிலால் புரோகித் மற்றும் அமைச்சர்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொள்கிறார்கள். பிரதமர் மோடி வந்து இறங்குவதற்காக மைதானம் அருகே 3 இடங்களில் ஹெலிபேடு அமைக்கும்பணியும் நடந்துவருகிறது.ஒன்று பிரதமர் மோடி வந்து இறங்குவதற்கும், மற்ற இரண்டு ஹெலிபேடு அவரின் உதவியாளர்கள், பாதுகாவலர்கள் வந்து இறங்குவதற்காகவும் அமைக்கப் படுகிறது. ஹெலிபேடு 30 மீட்டர் சுற்றளவிலும், 100 மீட்டர் நீளத்திலும் அமைக்கப்படுகிறது.

பொதுக்கூட்ட மேடை 40 நீளத்திலும் 60 அடி சுற்றளவிலும் அமைக்கும் பணி வேகமாக நடந்துவருகிறது. மேலும் பாதுகாப்பு பணியில் சுமார் 2500 போலீசார் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

Leave a Reply