அண்மையில் விடுதலை சிறுத்தைகள் கட்சிதலைவர் தொல்.திருமாவளவன் இந்துக்களை பற்றி பேசியகருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில் அசிங்கமான பொம்மைகள் இருந்தால் அது இந்துகட்டடம் என்று தொல்.திருமாவளவன் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்தகருத்துக்கு நடிகையும், பாஜக ஆதரவாளருமான காயத்ரி ரகுராம் கூறியகருத்தும் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதனையடுத்து இந்து கோவில்கள் குறித்து இழிவாக பேசிய தீயசக்திகளின் ஒட்டுமொத்த உருவம் திருமாவளவன் மீது தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். சிவன் கோயில் மற்றும் பெருமாள் கோயில்களை இடிப்பேன் தகர்ப்பேன் என்று பேசிய அன்றே இவரை கைதுசெய்திருக்க வேண்டும் என்று ட்வீட் போட்டு இருந்தார்.

இந்த நிலையில் மீண்டும் பாஜக தேசியசெயலாளர் எச்.ராஜா மீண்டும் கருத்து ஒன்றை போட்டுள்ளார். அதில் “திருமாவளவனைப் போன்று வன்முறையை தூண்டி வன்முறையை நம்பி அரசியல்செய்கின்ற சட்டவிரோத சக்திகள் பாராளுமன்றத்தில் உறுப்பினராக இருப்பது நம் தமிழ் சமுதாயத்திற்கே வெட்கக்கேடு ஆகவே இவரை நாம் அரசியல் பொதுத்தளத் திலிருந்து வெளியேற்றுவதற்கான முழு முயற்சி மேற்கொள்ளவேண்டிய நேரமிது” என்று ட்வீட் போட்டுள்ளார்.

Comments are closed.