திருவள்ளுவர் ஒன்றும் திமுக., தலைவர் அல்ல என பா.ஜ., தேசிய பொதுச் செயலாளர் முரளிதர ராவ் தெரிவித்துள்ளார்.

தஞ்சை மாவட்டம் பிள்ளையார்பட்டியில், திருவள்ளுவர் சிலை அவமதிப்புகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், தமிழுக்காக பாடுபட்டவர்களை அவமதிப்பது தொடர்கதையாகி விட்டது எனவும், இதற்கு காவல் துறையை கையில் வைத்திருக்கும் அதிமுக அரசு வெட்கி தலைகுனிய வேண்டும் எனவும் பதிவிட்டிருந்தார்.

இதற்கு பதிலடிதரும் விதமாக பா.ஜ., தேசிய பொதுச்செயலாளர் முரளிதர ராவ் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: உலகளாவிய மனித குலத்திற்கான மதிப்பீடுகளுடன் வாழ்ந்தவர் திருவள்ளுவர். அவரை ஒரு குறுகியவட்டத்திற்குள் அடைக்க நினைப்பதை, ஸ்டாலின் கைவிட வேண்டும். திருவள்ளுவர் ஒருதுறவி; அவர் ஒன்றும் திமுக தலைவர் அல்ல. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Comments are closed.