மத்திய அரசின், 'டிஜிட்டல் இந்தியா' திட்டத்தின்கீழ், வரும் தீபாவளி பண்டிகைக்குள், பிரதமர் நரேந்திர மோடி பிறந்த குஜராத் மாநிலம் வாத்நகரை, முழுவதும் டிஜிட்டல் மயமாக்கும் பணிகள் நடந்துவருகின்றன.

குஜராத்தில், பா.ஜ.,வை சேர்ந்த, விஜய் ரூபானி முதல்வராக உள்ளார்.பிரதமர் நரேந்திரமோடி, இந்த மாநிலத்தின், மேஹ்சானா மாவட்டத்தில் உள்ள வாத் நகரில் பிறந்தார்.மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின்கீழ், நாட்டின் பலகிராமங்களிலும், டிஜிட்டல் சேவைகள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், பிரதமர்மோடி பிறந்த ஊரை பெருமைப்படுத்தும் வகையில், வாத் நகர் முழுவதும் டிஜிட்டல் மயமாக்கும்பணியில், மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.வரும் அக்டோபரில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அதற்குள், வாத்நகர் மற்றும் அதை சுற்றியுள்ள, 43 கிராமங்களில், அனைத்து துறைகளையும் டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்துடன் பணிகள் வேகமாக நடந்துவருகின்றன.

Leave a Reply