ஜம்மு காஷ்மீர் மற்றும் மாவோயிஸ்ட் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில், கூடுதலாக 17 இந்திய ரிசர்வ் (ஐஆர்) படைப் பிரிவை உருவாக்க மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கியது.

பிரதமர் நரேந்திரமோடி தலை மையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 5 படைப் பிரிவும், சத்தீஸ்கரில் 4, ஜார்க்கண்டில் 3, ஒடிஷாவில் 3, மற்றும் மகாராஷ்டிராவில் 2 படைப் பிரிவுகளும் கூடுதலாக உருவாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்அளித்தது.

இந்த படையில் உள்ளூர் இளைஞர்கள் நியமிக்கப்படுவார்கள். இவர்களுக்கு வயது மற்றும் கல்வித்தகுதி தொடர்பான விதிமுறைகள் தளர்த்தப்படும். இதன்படி ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் புதிதாக நியமிக்கப்படும் காவலர் மற்றும் 4-ம் நிலை ஊழியர்களில் 60 சதவீதம் பேர் எல்லைப்புற மாவட்டங்களை சேர்ந்தவர்களாக இருப்பார்கள்.

இதுபோல, இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் நியமிக்கபடும் காவலர்களில், 75 சதவீதம் பேர் மாவோயிஸ்ட் ஆதிக்கம் நிறைந்த மாவட்டங்களை சேர்ந்தவர்களாக இருப்பார்கள்.

Leave a Reply