இந்திய பிரதமர் மோடி, இங்கிலாந்து பிரதமர் தெரசாமே இருவரும் நடத்திய பேச்சு வார்த்தையில் தீவிரவாதத்தை ஒடுக்குவதற்கு இணைந்து செயல்படுவது என முடிவெடுக்கப் பட்டுள்ளது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக ஸ்வீடன் மற்றும் இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். ஸ்வீடன் பயணத்தைமுடித்து, இங்கிலாந்துக்கு சென்ற மோடிக்கு அங்கு சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது.

இதன்பின் இங்கிலாந்து பிரதமர் தெரசா மேவுடன் நடந்த பேச்சுவார்த்தையில், இரு நாடுகளும் எந்தெந்த துறைகளில் ஒன்றிணைந்து செயல்படுவது என்பது பற்றி விவாதிக்கப்பட்டது.

தொடர்ந்து நடந்த பேச்சு வார்த்தையில், சர்வதேசளவில் அச்சுறுத்தலாக இருக்கும் பாகிஸ்தானை சேர்ந்த ஜாஸ்-இ-முகமது மற்றும் லஷ்கர்-இ-தொய்வா உள்ளிட்ட தீவிரவ அமைப்புகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க ஒன்றிணைந்து செயல்படவேண்டும் என முடிவெடுக்கப்பட்டது.

Leave a Reply