தீவிரவாதமும், தீவிரவாத கொள்கை களுமே உலகம் எதிர் கொண்டுள்ள மிகப் பெரிய அச்சுறுத்தல் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.

தீவிரவாதத்திற்கு எதிரான போர் மற்றும் போதைப் பொருள் தடுப்புதொடர்பான ஒப்பந்தங்களில் கையெழுத்திடு வதற்காக ரஷ்யா சென்ற உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், மாஸ்கோவில் இந்தியர்களிடையே உரையாற்றினார். பாதுகாப்பு, தீவிரவாத ஒழிப்பு, கள்ள ரூபாய்நோட்டை ஒழிப்பது ஆகியவற்றில் இருநாடுகளுக்கு இடையே இணக்கமான முடிவு எட்டப் பட்டுள்ளது, தீவிரவாதமும், தீவிரவாத கொள்கைகளுமே உலகிற்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக உள்ளது

எல்லையில் ஊடுருவும் தீவிரவாதிகளை ஒழித்துக் கட்டும் பாதுகாப்பு படையினர், நாட்டை தீவிரவாதத்தின் பிடியில்இருந்து பாதுகாப்பதில் முக்கியப் பங்காற்றுவதாக பாராட்டுதெரிவித்தார்.

Leave a Reply