அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தரின் அதிகாரத்தில் தலையிட யாருக்கும் அதிகாரமில்லை என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

வீரபாண்டிய கட்ட பொம்மனின் நினைவு நாளையொட்டி சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் கட்டபொம்மனின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்திய தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை, சுதந்திரமாக செயல்படவிடாமல் சிலர் தடுக்கின்றனர். அண்ணா பல்கலைக் கழகத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கினால் இடஒதுக்கீடு பாதிப்பு என சிலர் தவறாக பேசிவருகின்றனர். சிறப்பு அந்தஸ்து வழங்கினாலும் 69% இடஒதுக்கீட்டுக்கு எந்தபாதிப்பும் ஏற்படாது. அதுமட்டுமின்றி துணைவேந்தரின் அதிகாரத்தில் தலையிட யாருக்கும் அதிகாரமில்லை என்று தெரிவித்தார்.

மேலும் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தவர், முத்தையா முரளிதரனின் வாழ்க்கைவரலாற்று படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பது அவருடைய உரிமை என்றார்.

பட்டியலினத்தவர்களை தொடர்ந்து இழிவுபடுத்திவரும் திமுகவினர் மீது ஸ்டாலின் என்ன நடவடிக்கை எடுத்துள்ளார் என்றும் கேள்வி எழுப்பினார்.

Comments are closed.